சென்னை, ஜூன் – 28, இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமையார் நினைவிடம் அமைந்துள்ள சாந்தோம் பேராலய வளாகத்தில் புனித தோமையார் பெருவிழா . தொடங்கியது.
பேராலய அதிபர் பங்குத் தந்தை வின்சன் சின்னதுரை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
ஐந்து நாள் திருவிழாவின் முதல் நாளில் இசை வாத்தியங்கள் முழங்க, சிலுவைகளை கையில் ஏந்திய படியும் , புனித தோமையார் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது.அதிகாரப்பூர்வமாக புனித தோமையார் பெருவிழா புதன்கிழமை தொடங்கி இந்த பெருவிழா ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்வுகளுடன் நடைபெற இருக்கிறது.
வியாழக்கிழமை நற்கருணை பெரு விழாவும், வெள்ளிக்கிழமை குடும்ப விழாவாகவும், சனிக்கிழமை ஆயர் திருநிலைப்பாட்டு வெள்ளி விழாவாகவும், இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை வெகு விமர்சையாக தேர்த்திருவிழாவுடன் கொடி இறக்கம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.