வேலூர்=19
காட்பாடியிலிருந்து பாகாயம் செல்லும் தனியாருக்கு சொந்தமான டவுன் பஸ். அதன் டிரைவர் இன்று இரவு 9.30 மணி அளவில் காட்பாடியில் இருந்து பாகாயம் செல்லும் வழியில் சிஎம்சியை கடந்து மக்கான் சிக்னல் அருகே வரும் பொழுது தாறுமாறாக பேருந்தினை இயக்கிய டிரைவர். சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டுக்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் ஒரு ஆட்டோவின் மோதி பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. சப்பையாக நசுங்கிய ஆட்டோவில் இருந்து அதிர்ஷ்டவசமாக பயணம் செய்த அனைவரும் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினர்..
மிகவும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் மிகவும் அதிவேகமாக பேருந்தை இயக்கி வந்த பேருந்து ஓட்டுனர் விபத்தை ஏற்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து தலைமறைவானார்..
உடனடியாக அப்பகுதியில் குவிந்த பொதுமக்கள் பேருந்து ஓட்டுனரை போலீசார் தான் தப்பவிட்டனர் என்று போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்..
தப்ப விட்ட ஓட்டுநரை உடனடியாக கைது செய்து அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பினர். குவிந்த பொதுமக்களை பார்த்த போலீசார் செய்வதெறியாது திகைத்து நின்றனர்
விபத்தின் காரணமாக காட்பாடி வேலூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.. இதனால் அந்தப் பகுதியை பரபரப்பாக காணப்பட்டது.
வடக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கும் சேதம் அடைந்த வாகனங்களை அப்புறப்படுத்தியும் தப்பி சென்ற ஓட்டுனர் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…