கன்னியாகுமரி டிச 10
மதுபோதையில் ஆட்டோ ஓட்டி வந்த ஓட்டுநரின் வாகனத்தை பறிமுதல் செய்து கன்னியாகுமரி போக்குவரத்துக் காவல்துறை நடவடிக்கை
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், உத்தரவுப்படி கன்னியாகுமரி காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார், மேற்பார்வையில் கன்னியாகுமரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரபு, போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் மற்றும் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பால்கனி, முருகேசன்
ஆகியோர் கன்னியாகுமாரி சிலுவைநகர் பகுதியில் வாகன தணிக்கையின் போது மது போதையில் ஆட்டோ ஓட்டி வந்த ஆட்டோவை பறிமுதல் செய்து ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து ரூ15000 அபராதம் விதித்தனர்.பின்னர் ஆட்டோ ஓட்டுநரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வதற்கு வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரை செய்தனர்.