திருப்பத்தூர்:டிச:20,
அம்பேத்கரை அவமதிக்கும் விதமாக பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . மாவட்ட செயலாளர், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் மற்றும் முன்னாள் மாவட்ட ஆவின் பால் வளத் துறைத் தலைவர், நகர கழக செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ராஜேந்திரன் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் புதிய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பேசுகையில்: இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை இயற்றிய அண்ணல் அம்பேத்கரை அவமதிப்பு செய்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும். மேலும் நாடாளுமன்றத்திலும், பொதுமக்களிடையே பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். ஒட்டுமொத்த மக்களின் விடுதலைக்காக போராடி தியாகம் செய்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய வரை, ” இப்போதெல்லாம் அம்பேத்கர் அம்பேத்கர் என்று சொல்வது பேசனாகிவிட்டது! அவர் பெயரை கூறுவதை விட்டுவிட்டு கடவுளை வணங்கினால் புண்ணியமாவது கிடைக்கும்! என்று பேசியது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாக மட்டும் அல்லாமல், ஒட்டுமொத்த சமூக மக்களின் நல்லிணக்கத்தை சீர்குழைக்கும் விதமாக பேசியது கண்டனத்திற்குரியது. அம்பேத்கரை அவமதிக்கும் விதமாக பேசியதை நாடாளுமன்ற அவையில் பல எதிர்ப்புகள் கிளம்பினாலும் ஒட்டுமொத்த இந்திய தேசத்தில் அம்பேத்கரை உள்வாங்கியுள்ள அனைவரும் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகளின் எதிர்ப்பலைகள் இருந்து வரும் சூழ்நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக முழுவதும் மாவட்ட அளவில் முக்கிய நகர மையங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என பேசினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ. வில்வநாதன், திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்டத் துணைச் செயலாளர்கள் சம்பத்குமார், T.K.மோகன், திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன், வாணியம்பாடி நகர செயலாளர் சாரதி, கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி.திருமதி திருமுருகன், நகர மன்ற உறுப்பினர், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் ஐயப்பன், கந்திலி ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் K.A. குணசேகரன், மோகன்ராஜ், ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், உமா கண்டங்கம், கவிதா தண்டபாணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல், முன்னாள் நகர மன்ற தலைவர் அரசு மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட நகர, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய அண்ணல் அம்பேத்கர் அவர்களின் உருவ பதாகைகளை ஏந்தி கொண்டு தங்களது கண்டன முழக்கத்தினை தெரிவித்தனர்.