கிருஷ்ணகிரி: அக்டோபர்:04:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஊராட்சி ஒன்றியம், தட்டிகானப்பள்ளி, முத்தாலி, சூடுகொண்டப்பள்ளி, நாகொண்டப்பள்ளி, கோபனப்பள்ளி மற்றும் மாசிநாயக்கனப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை பொறியியல், தோட்டக்கலைத்துறை ஆகிய துறைகள் சார்பில் ரூ.6 கோடியே 72 இலட்சத்து 85 ஆயிரத்து 209 மதிப்பில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள்
நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஓசூர் ஊராட்சி ஒன்றியம், தட்டிகானப்பள்ளி ஊராட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பாக, நுண்ணீர் பாசனத் திட்டம் 2023-2024 -ன் கீழ், விவசாயி.பிரியா த/பெ.தட்சணாமூர்த்தி அவர்களின் விவசாய நிலத்தில் ரூ.28,812 முழு மானியத்தில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு, பராமரிப்பு பணிகள், சாகுபடி மற்றும் விற்பனை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து மிளகாய்கள் நேரடியாக ஓசூர் உழவர் சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து எங்களுக்கு மிகவும் இலாபகரமாக உள்ளது என தெரிவித்தார். மேலும், வேளாண்மை விற்பனைத்துறை சார்பாக, தமிழ்நாடு விநியோக தொடர் மேலாண்மை திட்டத்தின் கீழ், ரூ.5 கோடியே 90 இலட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள முதன்மை பதப்படுத்தும் நிலையத்தில் முந்திரி பதப்படுத்தி ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, முத்தாலி ஊராட்சியில், தோட்டக்கலைத்துறை சார்பாக, நுண்ணீர் பாசனத் திட்டம் 2023-2024 -ன் கீழ், விவசாயி .நாராயணம்மா க/பெ.கிருஷ்ணன் அவர்களின் விவசாய நிலத்தில் முழு மானியத்தொகை ரூ.54,093 மதிப்பில் சாமந்திப் பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு, சாமந்தி அறுவடை, ஏற்றுமதி மற்றும் இலாபம் குறித்து விவசாயிடம் கேட்டறிந்தார். மேலும், நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த நாள் மற்றும் தங்களுக்கு நுண்ணீர் பாசனத் திட்டம் கிடைக்கப்பெற்றது குறித்து விவசாயிடம் கேட்டறிந்து, ஆழ்துளை கிணறு மூலம் பூச்செடிகளுக்கு தேவையான தண்ணீர் முழுமையாக கிடைக்கிறதா என்பதையும், நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் நீர்சேமிப்பு பயனுள்ளதாக உள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தார்.தொடர்ந்து, சூடுகொண்டப்பள்ளி ஊராட்சியில் வேளாண்மைத்துறை சார்பாக, முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் 2024-2025 திட்டம், ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ், 5 பயனாளிகளுக்கு மானியத்தொகை ரூ.1 இலட்சத்து 4 ஆயிரத்து 500 மதிப்பில் கறவை பசுக்கள் வழங்கப்பட்டுள்ளதை குறித்தும், நாள்தோறும் பால் உற்பத்தி மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், கறவை பசுக்களை நல்ல முறையில் பராமரித்து பால் உற்பத்தியை பெருக்க வேண்டும் 6T60T கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, ஆடாதோடா மற்றும் நொச்சி போன்ற பூச்சி விரட்டும் பண்புகளைக் கொண்ட மருத்துவ தாவரங்களின் செடிகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.
தொடர்ந்து, நாகொண்டப்பள்ளி ஊராட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பாக, விவசாயி திர.சிதம்பரம் த/பெ.முத்துவேல்பிள்ளை அவர்கள் தேசிய தோட்டக்கலை மிஷன் திட்டத்தின் கீழ், முழு மானியத் தொகை ரூ.73 இலட்சம் மதிப்பில் அமைத்துள்ள திசு வளர்ப்பு அலகு மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், கோபனப்பள்ளி ஊராட்சியில் வேளாண்மை பொறியியல் துறை சார்பாக, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், முழு மானியத்தொகை ரூ.7 இலட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, விவசாய நிலத்தில் சாமந்தி பயிரிடப்பட்டுள்ளது குறித்து விவசாயிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, மாசிநாயக்கனப்பள்ளி ஊராட்சியில், வேளாண்மைத்துறை சார்பாக, விவசாயி .நாகேந்திரன் த/பெ.கிருஷ்ணப்பா அவர்களின் விவசாய நிலத்தில் நுண்ணீர் நீர்ப்பாசனத் திட்டம் 2023-2024 -ன் கீழ், ரூ.89,129 மானியத்தில் துவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளதையும், மேலும், விவசாயி .சங்கரய்யா த/பெ.லகுமப்பா அவர்களின் விவசாயி நிலத்தில் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2024-2025 -ன் கீழ், ரூ.8,675 மானியத்தில் (முழுத்தொகை ரூ.18,000) துவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, விவசாயிகளிடம், தமிழக அரசு வழங்க வேளாண்மை துறை சார்பாக வழங்க கூடிய நுண்ணீர் பாசன திட்டம், இடுபொருட்கள் வழங்குதல், தொழில்நுட்ப உதவிகளை விவசாயிகள் பயன்படுத்தி வேளாண் பொருட்களின் உற்பத்தி திறனை அதிகரித்து நல்ல விளையில் விற்பனை செய்து தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் விவசாயிகளிடம் தெரிவித்தார்.இந்த ஆய்வுகளின்போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) .ராஜமோகன், வேளாண்மைத்துறை துணை இயக்குநர் .கலா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் .குணவதி, தோட்டக்கலைத்துறை உதவி .ஜெனிவர், .செந்தில்குமார், வேளாண்மைத்துறை உதவி இயக்குநர்கள் இயக்குநர் .புவனேஸ்வரி, வேளாண் விற்பனைத்துறை உதவி வேளாண் அலுவலர் .சுஷ்மிதா, வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் .கார்த்திகேயன், உதவி வேளாண் அலுவலர் .சீனிவாசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.