தஞ்சாவூர். டிச.16.
தஞ்சாவூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பூதலூர், திருவையாறு தாலுக்காவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
செங்கிப்பட்டியில் உள்ளமகாத்மா காந்தி நினைவு காச நோய் மற்றும் மார்பு நோய் மருத்துவமனையில் மருந்து சீட்டு வாங்கும் இடம், மருந்து வழங்குமிடம், சிகிச்சை மருத்துவ பரிசோதனை பிரிவு, எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை, ஆகிய பிரிவுகளின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
அதனைத் தொடர்ந்து மருத்துவ மனையில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாடு பணிகள் குறித்தும், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .பின்னர் பூதலூரில் உள்ள பொது விநியோக மையத்தில் செயல்பாடுகளையும், உணவு பொருள்களின் இருப்பு, தரம் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.
மேலும் பூதலூர், திருக்காட்டுப் பள்ளி மற்றும் திருவையாறு பொதுப்பணி துறை நீர்வள ஆதாரத்துறையில் சார்பில் வெள்ள கால தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மணல் மூட்டைகள் இருப்பில் வைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதையும்,திருவையாறு சத்திரம் நிர்வாகம் அரசர் கல்லூரி யில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாடு பணிகள் குறித்தும், மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
இந்த ஆய்வின்போது தாசில்தார்கள் மரிய ஜோசப் (பூதலூர்) தர்மராஜ் (திருவையாறு) சக்திவேல் (சத்திர நிர்வாகம்) பொதுப்பணித்துறை நீர் வளம் உதவி பொறியாளர்கள் அன்புச் செல்வன், சபரிநாதன், செந்தில் குமார், செங்கிப்பட்டி காச நோய் மருத்துவமனை அலுவலக மேலாளர் ராஜகுரு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்