அரியலூர்,செப்;30
அரியலூர் மாவட்டம், செந்துறை தெற்கு – வடக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ் எழில்மாறன் ஆகியோர் தலைமையில் திராவிட மாடல் ஆட்சியில் தமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின் அவர்களை வரவேற்று செந்துறை அம்பேத்கர் சிலையிலிருந்து அண்ணா சிலை வரை ஊர்வலமாக வந்து திமுக கட்சியின் அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு ஆதரவாக வாழ்த்துக்கள் கூறியபடி 100 க்கும் மேற்பட்ட கட்சியின் தொண்டர்கள் ஒன்று கூடி கோஷங்கள் எழுப்பியவாறு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களின் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர். மேலும், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை கூட்டிக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி சின்னவர் வாழ்க உதயநிதி ஸ்டாலின் வாழ்க என கோஷங்கள் எழுப்பினர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்