டிச. 20
அம்பேத்கர் குறித்த அமித்ஷா கருத்துக்கு கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். என திருப்பூரில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி. 311 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னதாக திருப்பூர் ரயில் நிலையம் எதிரே அமைந்துள்ள அண்ணா மற்றும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் பின்னர். பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் புதிய நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்தல். மற்றும் முடிவடைந்த திட்ட பணிகளை தொடங்கி வைத்தல் என 311 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளை துவக்கி வைத்தார். இதன் பின்னர் பயனாளிகளிடையே பேசிய அவர் இது மகளிர் காண அரசு எனவும் தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்தாக இலவச மகளிர் பயண திட்டத்தை தொடங்கி வைத்தார். என பேசினார் இதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் வருவாய் அலுவலர்கள் உடனான ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு மாவட்டத்தில் முடிக்க வேண்டிய பணிகள் குறித்து கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் திருப்பூர் மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்குவதாகவும் சிறப்பான முறையில் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தொய்வடைந்த சில பணிகளை விரைந்து முடிக்குமாறு ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அமித்ஷா குறித்த கேள்விக்கு அம்பேத்கர் குறித்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளதாக தெரிவித்தார் .