திருப்பரங்குன்றம் மார்ச் 05
திருப்பரங்குன்றம்
விருதுநகர் தொகுதி எம்பி, மாணிக்தாகூர்
செய்தியாளர்களிடம் கூறியதாவது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தலைமை நிர்வாக அதிகாரி அலோக் சிங்கை டெல்லியில் உள்ள அவரது தலைமை அலுவலகத்தில் சந்தித்தோம்.
இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது.
இதில் மதுரை – சிங்கப்பூர் விமான சேவையை ரத்து செய்யும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்பதையும், மேலும் மதுரை விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கும், கோலாலம்பூர் போன்ற பிற முக்கிய நாடுகளுக்கு விமான சேவைகள் வழங்கும் வாய்ப்புகள் பற்றியும் விரிவாக விவாதித்தேன்.
அப்போது அவர்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் மதுரை-சிங்கப்பூர் சேவையை ரத்து செய்யும் முக்கிய காரணமாக, மூன்று மாதங்களை தவிர மற்ற ஒன்பது மாதங்களில் மதுரை விமான நிலையத்திலிருந்து வெறும் 50% முதல் 60% பயணிகளே பயணிக்கிறார்கள்.
இதனால் வர்த்தக ரீதியாக இச்சேவையை தொடர்ந்து இயக்குவது சிரமமாக இருப்பதாக தெரிவித்தார். எனினும், வரும் குளிர்கால கூட்டத் தொடர் (Winter Schedule) குறித்து மறுபரிசீலனை செய்யவும், மேலும் விரிவாக ஆய்வு செய்யவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் மதுரை விமான நிலையத்திலிருந்து பயணிகளை அதிகரிக்க தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். மதுரை-சிங்கப்பூர் விமான சேவை நீடிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
என்று கூறினார்.
இந்த சந்திப்பின் போது மதுரை டிராவல்ஸ் கிளப் சார்பாக . முஸ்தபா, டிராவல்ஸ் கிளப் தலைவர். ரவீந்திரன், ட்ராவல் கிளப் ராஜா மற்றும் மதுரை விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினர். காளிதாஸ் ஆகியோர்கள்
உடனிருந்தனர்.