சின்னமனூர்.
தேனி மாவட்டம் சின்னமனூர் மாணிக்கவாசகர் கோவில் அருகே தனியார் கடை வாசல் முன்பு மனநலம் பாதித்த பெயர் விலாசம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக சின்னமனூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார் இறந்த நபர் யார் எந்த ஊர்,மனநலம் பாதித்தவரா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தன்னார்வலர்கள் சிலர் கூறுகையில் .இவர் கம்பம் உத்தமபாளையம் சின்னமனூர் ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மார்க் மதுபான கடைகளில் நின்று கொண்டு 10 20 என பெற்று மது அருந்தி வந்ததாகவும் மேலும் இவர் ஒரு மனநலம் பாதித்தவர் யாருடனும் பேச மாட்டார் என்றும் கூறினர்.ஆகவே இறந்த நபரின் சடலத்தை தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகபோலீசார் தெரிவித்தனர். இவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் சின்னமனூர் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு போலீசார் கூறினர்.
தேனியில் மனநலம் பாதித்தவர்கள் அதிகமா!
தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெயர் விலாசம் தெரியாத ஆண் பெண் நபர்கள் பலர் சுற்றி திரிகின்றனர். இதனைப் பற்றி பலமுறை செய்தி வெளியிட்டும் தேனி மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை ஒரு கேள்விக்குறியாக உள்ளது.தமிழக மற்றும் அல்லாது வெளிமாநிலத்தார்களும் மனநலம் பாதித்து தேனி மாவட்டத்தில் சாலையோரங்களில் தன் சுயநலவு இன்றி நடந்து செல்வதும் அவர்கள் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழப்பதும் தேனி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. அது ஒரு புறம் இருக்க பசி பட்டினி, தண்ணீர் இன்றி இதுபோன்று உயிரை விடுவதும் அரங்கேறியுள்ளது. எனவே தேனி மாவட்ட நிர்வாகமும் துறை சார்ந்த அதிகாரிகள் தேனி மாவட்டத்தில் சுற்றி திரியும் மனநல பாதித்தவர்களை கண்டறிந்து அவர்களை உரிய காப்பகத்தில் சேர்க்க வழி வகுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.