கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள படதாசம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. (வயது 55 )
விவசாயி.
இவர் கடந்த மாதம்
24-ம் தேதி ஊத்தங்கரை கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி அருகே சாலை விபத்தில் இறந்து
கிடப்பதாகவும் கோவிந்தசாமியின் உடல் இருந்ததைப் பார்த்து அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்
சம்பவ பகுதியில் காவல் ஆய்வாளர் முருகன் இறந்த நபர் குறித்து விவரங்களை விசாரணை செய்ததில்
அவரது மனைவி நாரலப்பள்ளி
கிராம உதவியாளர் மாதேஸ்வரி
(வயது 49)
என்பது தெரியவந்தது
ஊத்தங்கரை போலீசில் இறந்த நபரின் மனைவி மாதேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பிரேத பரிசோதனை முடித்து
பிரேதத்தை அவருடைய மனைவி மாதேஸ்வரியிடம் ஒப்படைத்தனர்.
பிரேதத்தை எடுத்து சென்று அவரது நிலத்தில் அடக்கம் செய்தனர்.
ஊத்தங்கரை டிஎஸ்பி சீனிவாசன் உத்தரவின் பெயரில் காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் சீனிவாசன் முதன்மை காவலர் மணிவாசகம் மற்றும் பிரபாகரன் அடங்கிய குழுவினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்
விசாரணையில் திடீர் திருப்பம்
நெடுஞ்சாலை ஓரத்தில் இறந்த நிலையில் இருந்த நபர் கொலை செய்யப்பட்டு தேசிய நெடுஞ்சாலை ஓரம் போட்டு விட்டு சென்றது தெரியவந்துள்ளது
விசாரணையில் இறந்து போன கோவிந்தசாமி மனைவி மாதேஸ்வரி, அவருடைய மகளும் ரஞ்சித்குமார் என்பவருடைய மனைவியுமான சரண்யா (23) ஆகிய இருவரும் கூலிப்படை வைத்து கொலை செய்து சாலையில் போட்டுள்ளனர்
கூலி படையில் சாம்பல்பட்டி பகுதியை சேர்ந்த சேகர் மகன் வேல்முருகன் (29) ஊத்தங்கரை பாரதிபுரம்
சிவகாசிகுமார் (23)
தலைமறைவாக உள்ள
முஷராப்,
நந்து, பிரசாந்த், ஆகியோர்கள் கிரிக்கெட் பேட்டால் கை கால் உடைக்க தாக்கியதாகவும் தலையின் பின்பக்கம் அடித்ததில் சம்பவ இடத்தில் இறந்து விட்டதாகவும்.
இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து இறந்து போனதாக நாடகம் ஆடியதாக விசாரணையில் தெரிய வந்தது.
இறந்த கோவிந்தராஜ் மனைவி மாதேஸ்வரியிடம் விசாரித்த போது பலமுறை கணவன் மனைவி பிரச்சனையில் சாம்பல்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் போதெல்லாம் எங்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாகவும்,
அதனால் பெரிதள்ளபாடி
கிராமத்தை சேர்ந்த பிரசாந்த் என்பவரிடம் 20 ஆயிரம் கொடுத்து கை காலை உடைக்க சொன்னதாகவும் அவர்கள் கொலை செய்வார்கள் என நினைக்கவில்லை என மாதேஸ்வரி கூறியுள்ளார்.
இந்த நிலையில் போலீசார் நால்வரையும் பிடித்து தீவிர விசாரணை செய்து சிறையில் அடைக்கும் பணியில் ஈடுபட்டனர்
தலைமறைவாக உள்ள மூன்று நபர்கள் தலைமறைவாக உள்ளதாகவும் அவர்களைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்