ஈரோடு நவ. 14
ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில் அருகே உள்ள கந்தாம்பாளையம் கிராமத்திற்கான மனுநீதி நாள் முகாம் நசியனூரில் நடந்தது. முகாமில் மாவட்ட ஆட்சி தலைவர் ராஜ கோபால் சுன்கரா 70 பயனாளிகளுக்கு ரூ.4.22 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
3 பயனாளிகளுக்கு ரூ.20,070 மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரங்களும், வேளாண்மைத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.2,075 மதிப்பீட்டில் விசை தெளிப்பான்களையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.44,400 மதிப்பீட்டில் நிரந்தர காய்கறி பந்தல் அமைப்பதற்கான மானியம், தென்னம்பிள்ளையினையம், 10 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவு ஆணைகளையும், 4 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், சுகாதாரத்துறையின் சார்பில் 6 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினையும், 2 பயனாளிகளுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகத்தினையும், 4 பயனாளிகளுக்கு வாரிசு சான்றுகளையும், 2 பயனாளிகளுக்கு சிறு, குறு விவசாயி சான்றுகளையும், 10 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.1,54,197
மதிப்பீட்டில் தண்டுவடம் பாதிக்கப்பட்டவருக்கான பெட்ரோல் ஸ்கூட்டர், கார்னர்சேர், செயற்கை கால் மற்றும் டெய்ஸிபிளேயர், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.2.02 லட்சம் மதிப்பீட்டில் இயற்கை மரணம், கல்வி, திருமணம் மற்றும் ஓய்வூதிய உதவித்தொகைகளையும் என மொத்தம் 70 பயானிகளுக்கு
ரூ.4,22,742 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கிடும் வகையில் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவம், கால்நடைத் துறை, வேளாண்மை உழவர் நலத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, மகளிர் சுய உதவிக்குழு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து, இம்முகாமில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.