ஆண்டிபட்டி செப் 11:
ஆண்டிபட்டி அருகே விநாயகர் சிலை கரைப்பதை தடுத்த கிறிஸ்தவ குடும்பத்தினர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே உள்ள வனத்தாய் புரம் என்ற கிராமத்தில் இருந்து விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலையை கரைப்பதற்காக ஆற்றாங்கரைக்கு செல்லும் வழியில் அந்தப் பகுதியில் உள்ள கிறிஸ்துவ குடும்பத்தினர் எங்கள் தெரு வழியாக விநாயகர் சிலை கொண்டு செல்வதை அனுமதிக்க மாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர் இதையடுத்து விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்த கிறிஸ்துவ குடும்பத்தினரிடம் சமாதான பேச்சு வார்த்தை செய்து சிறிது நேரத்திலே ஆற்றங்கரைக்கு விநாயகர் சிலை கொண்டு சென்று கரைக்கப்பட்டது. திடீரென கிறிஸ்துவ குடும்பத்தினர் விநாயகர் சிலையை கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.