திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக திருப்பத்தூர் நகர காவல் நிலையம் தேர்வு சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் கேடயத்தினை காவல்துறை இயக்குனர் வழங்கி பாராட்டினார்
திருப்பத்தூர்:ஜூலை:24, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து பல்வேறு நடைமுறைகளில் சிறப்பாக செயல்பட்ட சிறந்த காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் நகர காவல் நிலையம் மாவட்டத்தின் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டது மேலும் அதற்கான முதலமைச்சர் கேடயத்தை 22.7.2024- அன்றைய தினத்தில் சென்னையில் உள்ள தலைமை இயக்குனர் அலுவலகத்தில் தமிழக காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் திருப்பத்தூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் தேவி (பொறுப்பு) அவர்களுக்கு கேடயம் பரிசாக வழங்கி பாராட்டினார். இதற்காக சிறப்பாக பணியாற்றிய திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில், திருப்பத்தூர் நகர காவல் ஆய்வாளர் மற்றும் ஆளினர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டினார்.