மதுரை பிப்ரவரி 28,
மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் கலங்கரை – ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறு வாழ்வு மையத்தை” காணொலி மூலமாக துவக்கி வைத்த தமிழக முதல்வர்
மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் மனநலத்துறை ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றம் மறு வாழ்வு மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 15 கோடியே 81 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 25 “கலங்கரை” ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை பற்றும் மறுவாழ்வு மையங்களை திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் விழாவிற்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முனைவர். பி.டி.ஆர். பழனி வேல்ராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்த், மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயா சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி மற்றும் மு.பூமிநாதன், வார்டு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அரசு இராசாசி மருத்துவமனை முதல்வர் மரு.லெ.அருள் சுந்தரேஷ் குமார், மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் மரு.செல்வராணி, நிலைய மருத்துவ அலுவலர்கள், உதவி நிலைய மருத்துவ அலுவலர்கள், செவிலிய கண்காணிப்பாளர்கள், மனநலத்துறை மருத்துவர்கள் பங்கேற்றனர். ஏற்கனவே பத்து படுக்கை வசதிகளுடன் போதை மீட்பு சிகிச்சை மற்றம் மறு வாழ்வு மையம் இயங்கி வந்தது. இப்பொழுது மேலும் 20 படுக்கை வசதிகளுடன் மொத்தம் 30 படுக்கை வசதிகளாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் புதிதாக செவிலியர், மனநல ஆலோசகர், மனநலம் சார்ந்த சமூகப் பணியாளர் மற்றும் மூன்று பல்நோக்கு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பொழுது ஆண்களுக்கு, பெண்கள், சிறார்கள் தனித்தனி வார்டும் அமைக்கப்ட்டுள்ளது. இவர்களுக்கு குழு சிகிச்சை, யோகா சிகிச்சை, குடும்ப ஆலோசனை மற்றும் தனிநபர் ஆலோசனை ஆகியன சிறப்பாக வழங்கப்படும். பொழுதுபோக்கு அம்சங்களுக்காக கேரம் போர்டு, சதுரங்கம், தொலைக்காட்சி வசதி அமைக்கப்பட்டுள்ளது. தீவிர உடல் நலப்பிரச்சினை அல்லாதவர்கள் உறவினர்கள் இல்லாமலும் அனுமதிக்கப்பட்டு தேவைப்பட்டால் உறவினர்களோடும் அனுமதித்து சிறப்பு சிகிச்சை அளிக்கப்படும். அனைத்து வித போதை (மது, புகைபிடித்தல், புகையிலை, கஞ்சா, போதை மாத்திரை, சமூக வலைதள விளையாட்டுகள் மற்றும் பல) சார்ந்த
பழக்கங்களுக்கும் தகுந்த சிகிச்சையளிக்கப்படும். உள் நோயாளிகளுக்கு மூன்று வேளை உணவுகள் வார்டில் அளிக்கப்படும். மன நலத்துறைத்தலைவர் மரு.வி.கீதாஞ்சலி தலைமையிலான குழு மருத்துவர்கள் மரு.கோ.அமுதா, மரு.ந.தீபா, மரு.து.கிருபாகர கிருஷ்ணன் மற்றும் செவிலியர்கள், மனநல ஆலோசகர்கள், சமூக ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து சிகிச்சையளிப்பார்கள்.