பூதப்பாண்டி – நவம்பர் – 13-
குமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்க்கு 5 கோடியே 40 இலட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது அந்த கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது, இந்த கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து கானொளி மூலம் திறந்து வைத்தார் பின்னர் பூதப்பாண்டியிலுள்ள இந்த அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றி துவைக்கி வைத்தனர்கள் இந்நிகழ்ச்சிக்கு தோவாளை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சாந்தினி பகவதி யப்பன் வரவேற்புரையாற்றினார், மாவட்ட ஆட்சி தலைவர் அழகு மீனா தலைமை தாங்கினார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பரமேஸ்வரன், ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் ஷேக் செய்ய துஅலி, மாவட்ட திட்ட இயக்குநர் பாபு, செயற்பொறியாளர் ஹசன் இப்ராகிம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட திமுக மாவட்ட பொருளாளர் ஐ.கேட்சன்,ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் மேரி ஜாய், ஐயப்பன், பூதலிங்கம் பிள்ளை, ஏசுதாஸ், மாலா, ராஜேஸ்வரி, மகராஜ பிள்ளை, ஞான பாய் மற்றும் உராட்சி மன்ற தலைவர்கள் பிராங்கிளின், சதீஷ், நெடுஞ்செழியன், நிலகண்ட ஜெகதீஷ், கல்யாணசுந்தரம்,மகேஷ் ஏஞ்சல், சுஜிதா சுப்பிரமணியன், கிருஷ்ணகுமாரி, கமலா, தாணம்மாள், ராஜலெட்சுமி, ரெஜினா , குமரி மாவட்டத்திலுள்ள ஓன்பது ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களும் அரசு அதிகாரிகளும் பொதுமக்களும்கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயா நன்றி கூறினார்