கோவை பிப்:25
தமிழகம் முழுவதும் மலிவான விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகத்தைத் திறந்து வைத்தார்.
கடந்த 15.8.2024 ஆம் அன்று சுதந்திரத் தின விழா உரையின்போது அறிக்கை ஒன்றைத் தெரிவித்திருந்தார். அதில், மலிவு விலையில் (ஜெனரிக்) மருந்து மாத்திரைகளையும், பிற மருந்துகளையும் பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்பட்டது. அந்த வகையில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்கராம நல்லூர் பேரூராட்சி கூட்டுறவு சங்கம் சார்பில் கொழுமத்தில் துவங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.