வேலூர் 22
வேலூர் மாவட்டம், கே .வி .குப்பம் வட்டம், முடினாம்பட்டு கிராமத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் கோயில் திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற 2ஆம் ஆண்டு காளை விடும் திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் காளைகள் கொண்டுவரப்பட்டு வாடிவாசல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டு காளைகள் சீறிப்பாய்ந்தன . ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் சாந்தி, முன்னாள் கிளைச் செயலாளர் அண்ணாச்சாமி, மேட்டுக்குடி லட்சுமணன், நாட்டாண்மைகள் ராஜசேகர், ஜெயக்குமார் ,பெரியதனம் ராஜேந்திரன், என்எல்சி ஓய்வு, ராஜேந்திரன், ராம்மோகன் , துணை நாட்டாண்மை வேலு, முரளி ,தருமன், துணை மேட்டுக்குடி பிச்சாண்டி ,இளைஞரணி தலைவர் கே. ஸ்ரீதர் ,இளைஞர் அணி துணை தலைவர் முரளி ,ஆகியோர் தலைமையில் காளை விடும் திருவிழா நடைபெற்றது. இதில் விழா குழுவினர்கள் ஊர் பொதுமக்கள் காளைகளின் உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு விழா குழுவினர்கள் சார்பில் பரிசுகள் வழங்கினர்.