தஞ்சாவூர்.ஜூன் 12.
ஆட்சிக்கு வந்த பாஜக வை குறைத் து மதிப்பிட முடியாது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் பாலகிருஷ்ணன்.
தஞ்சாவூரில் மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற விடுதலைப் போராட்ட வீரரும், தமிழக பொதுவுடமை இயக்க மூத்த நிர்வாகியும், எழுத்தாளர் முத்தையா 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் கருத்தரங்கில் அவர் பேசியதாவது:
மொழிவாரி மாநிலங்களை உருவாக்க வேண்டும் என முதலில் குரல் கொடுத்தது கம்யூனிஸ்ட் கட்சி தான். இதற்காக மிகப்பெரிய அளவில் ஊர்வலத்தை கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது. அப்போது காவல் துறையினர் நடத்திய தடியடியில் பலத்த காயம் அடைந்தவர்களின் முத்தையாவும் ஒருவர்.
கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு மகத்தான பங்களிப்பு செய்த முத்தையா தமிழ் இலக்கியங்களை கண்ணோட்டத்துடன் ஆய்வு செய்து வெளிப்படுத்தினார். அவருடைய மகத்தான பங்களிப்பை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். அவரது பெயரின் வரலாற்று ஆய்வு மையத்தை உருவாக்கி அடிக்கடி கருத்தரங்குகளை முன்னெடுக்க வேண்டும்.
பாஜக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்ததை குறைத்து மதிப்பிட முடியாது. பாஜக தங்களது கருத்தியல் கோட்பாடுகளை மீண் டும் மக்களிடம் உயிரூட்டுவதற்கு முயற்சி செய்யவும். இதை நாம் தவிடு பொடியாக்க வேண்டும். பாஜகவின் இந்துத்துவ கோட்பாடு களை மக்களிடையே அம்பலப்படுத் தும் பணி நமக்கு உள்ளது. மக்களி டையே மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்றார் பாலகிருஷ் ணன்.
கருத்தரங்கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலர் சின்னை. பாண்டியன் தலைமை வகித்தார் மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி பேராசிரியர் அருணன் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் பேசினர் .முன்னதாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் நீலமேகம் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக மாநகர செயலாளர் வடிவேல் நன்றி கூறினார்.