இளையான்குடி
ஜூலை:27
சிவகங்கை மாவட்டம்
இளையான்குடி வடக்கு ஒன்றியம் நாகமுந்தன்பட்டி ஊராட்சியில்
ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி பாலசுப்பிரமணியம் தலைமையில்
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்
நடைபெற்றது.
இதில் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தமிழரசி இரவிக்குமார் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்கள் மற்றும் பயனாளிகளுக்கு மருத்துவ பரிசுப்பெட்டகங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய தமிழரசி இரவிக்குமார் நமது தமிழக முதல்வரின் நல்லாட்சியில் இதுபோன்ற எண்ணற்ற பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். மேலும் பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை அனைவருக்குமான ஆட்சியாக நடத்தி வரும் நமது முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் இளையான்குடி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன் பேரூராட்சி தலைவர் பேரூர்க்கழக செயலாளர் நஜீமுதீன் மாவட்ட விவசாய அணி காளிமுத்து பேரூராட்சி கவுன்சிலர் ஜெயினுலாபுதீன் மாவட்ட திமுக பிரதிநிதி பூபதி துரை கிளைக் கழக செயலாளர்கள் ராஜகோபால் சுந்தரம் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.