கன்னியாகுமரி நவ 19
பெருமாள்புரம் ஸ்ரீ மன் நாராயணசாமி நிகழ்தாங்கலில்
திருஏடு வாசிப்பு நிறைவு நாள் விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த தலவாய் சுந்தரம் எம்எல்ஏவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக மீண்டும் எம்.எல்.ஏ.,தளவாய்சுந்தரம் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் பெருமாள் புரம் நாராயணசாமி விழாவில் பங்கேற்க வந்த எம்.எல்.ஏ.,தளவாய்சுந்தரத்தை வரவேற்க நேற்று 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திரண்டிருந்தனர்.
பட்டாசு வெடித்து சால்வே அணிவித்து தங்கள் உற்சாகத்தை வெளிபடுத்திய அதிமுக வினர் எம்.எல்.தளவாய் சுந்தரம் வாழ்க…வாழ்க..என நீண்ட நேரம் கோஷம் எழுப்பினர்.மாவட்ட செயலாளராக தளவாய்சுந்தரம் அறிவிக்கப்பட்டது அ.தி.மு.க வினர் இடையே கடும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.