மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட விரகனூர் மகாராஜா நகரில் உள்ள விஜயராஜன் நர்சரி&பிரைமரி பள்ளியில் இந்திய திருநாட்டின் 78 வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.விழாவில் பள்ளி தலைமையாசிரியை எஸ்.பாமா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் மாணவச் செல்வங்களுக்கு இனிப்புகள் வழங்கிய மகிழ்வித்தார்.
இதனைத் தொடர்ந்து மாணவச் செல்வங்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் உடை அணிந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பார்ப்போரை வியக்க வைத்தனர்.
இந்த நிகழ்வின் போது பள்ளி ஆசிரியைகள் மற்றும் மாணவப் பெற்றோர்கள் உள்ளனர்.