வேலூர்_19
வேலூர் மாவட்டம் ,ஆயுதப்படை தலைமையகம் காவலர் குடியிருப்பு டி பிளாக்ல் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ரேணுகாம்பாள் ஆலயத்தில் 15ஆம் ஆண்டு கூழ்வார்க்கும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பால் குடம் அபிஷேகமும், அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், மங்கள தீபாராதனையும் , பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர் சக்திவேல் முன்னிலையில் நடைபெற்றது. உடன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் எஸ். கன்னியப்பன், சிறப்பு உதவி ஆய்வாளர் ஆர். ஹரிகிருஷ்ணன், மற்றும் விழா குழுவினர்கள் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.