வேலூர் 25
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகேயுள்ள ராணுவப்பேட்டை என்ற கம்மவான்பேட்டை கிராமத்தில் ஸ்ரீ மஞ்சியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான காளை விடும் விழாவானது இன்று நடைபெற்றது
இதில் வேலூர் திருவண்ணாமலை,தி ருப்பத்தூர் ராணிப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து சுமார்150-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்து ஓடியது குறுகிய நேரத்தில் எல்லையை கடந்த காளைகளுக்கு முதல் பரிசாக 81 ஆயிரம், இரண்டாவது பரிசாக 60,000 மூன்றாவது பரிசாக 45 ஆயிரம் நான்காவது பரிசாக 35 ஆயிரம் ஐந்தாம் பரிசாக 25 ஆயிரம் ரொக்க பரிசுகளும் சான்றுகளும் வழங்கப்பட்டன
இதில் திரளான சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர் விழாவை கண்டுகளித்தனர்