திண்டுக்கல் ஜூன்:03
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள விருப்பாச்சியில் 30 – ஆம் ஆண்டு இறைநேசர் நினைவு விழா நிகழ்ச்சி புலி தூக்கி தாய் தர்கா வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு புது ஆயக்குடி ஜிகினாபாய் (எ) காதர் பாட்ஷா தலைமை தாங்கினார்.நிகழ்ச்சிக்கு சேக்பாரூக் முன்னிலை வகித்தார். சேக் அபுதாகிர் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியின் முன்னதாக இறைநேசர் நினைவு தினத்தை முன்னிட்டு தர்காவில் ஹஜ்ரத் குழுவினரின் மௌலூது ஷரிப் ஓதப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மதுரை தொழிலதிபர்கள் அஜிஇ, அப்துல் உசேன், முகமது மீரா, அப்துல்காதர் உட்பட தர்கா பள்ளி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அன்னதான விருந்து நடைபெற்றது. இதில் மும்மதத்தைச் சார்ந்த 1000-க்கும் மேற்பட்டார் கலந்து கொண்டனர். இவ்விழாவை திண்டுக்கல் எ.ஹீராலால் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.