கோவை ஏப்:19
தமிழக வெற்றி கழகம் கட்சியின் தொண்டர்கள் எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி பல்வேறு களப்பணி மற்றும் உறுப்பினர் சேர்க்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பொள்ளாச்சி வடக்கு (மேற்கு) ஒன்றியம், சூலக்கல் ஊராட்சியின், கிளை நிர்வாகி விஜய் அவர்களுடைய இல்லத்தில் கழக கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில் பொள்ளாச்சி வடக்கு (மேற்கு) ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.