தென்காசியில் நகர திமுக நிர்வாகிகளின் செயல்வீரர்கள் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவரும் திமுக நகர செயலாளருமான சாதிர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிகள் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கழகச் செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். கூட்டத்தின் போது நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 40 என்ற இலக்குடன் களம் கண்டு வெற்றி கண்ட தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நகர திமுக சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. தேர்தலுக்காக அயராது பாடுபட்ட நகர மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. நான் முதல்வன் திட்டத்தில் பாலிடெக்னிக் படித்து முடித்த 25,888 மாணவ மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பீடி தொழிலாளியின் மகளான இன்பா குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற சாதனை புரிய வைத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் இலத்தூர் பகுதியில் நடைபெற்ற விபத்தில் பலியானவர்களுக்கு ஐந்து லட்சம் நிதி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மேல்முறையிடு செய்த ஒரு லட்சத்து 48 ஆயிரம் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கியதற்கு தமிழக முதல்வருக்கு நகர கழகம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. தென்காசி புறவழிச்சாலை பணியினை விரைந்து முடித்து தர வேண்டும் தென்காசி நகர மக்களுக்கு தேவையான தாமிரபரணி குடிநீர் திட்டம் ரூபாய் 107 கோடி திட்டம் மதிப்பீட்டிலான பணிக்கு விரைந்து ஒப்புதல் வழங்க கேட்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ரூ.1000 உதவி தொகை வழங்கிய முதல்வருக்கு நன்றி

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics