கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ஜூன் மூன்றாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
அப்போது தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40/40 அபார வெற்றி பெற்றது.
அந்த வகையில் தென் சென்னை தொகுதியில் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிட்டு 516,628 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதனையடுத்து சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் தலைமையில் சோழிங்கநல்லூர் மத்திய பகுதியில் 199 வது வார்டு கழக செயலாளர் மாமன்ற உறுப்பினர் லயன் சங்கர் முன்னிலையில் வட்ட கழக துணை செயலாளர் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ராஜேஷ் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர். முன்னதாக தமிழச்சி தங்கபாண்டியன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.