தஞ்சாவூர். அக்.15
தேசிய அளவில் வில்வித்தை போட்டியில் தங்கம் வென்ற தஞ்சாவூர் மாணவியை மக்களவை உறுப்பினர் ச. முரசொலி பாராட்டினார்.
புதுடெல்லியில் நாடு முழுவதிலும் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கான தேசிய அளவிலான வில் வித்தை போட்டுகள் செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடை பெற்றது .இதில் தஞ்சாவூர் பி எம் ஸ்ரீகேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவி எல்.ஜீ.ஜீவிதாபங்கேற்று தங்கப் பதக்கம் வென்றார்
இதையடுத்து தொடர்ந்து சென்னையில் அக்டோபர் 4முதல் 9ஆம் தேதி வரை நடைபெற்ற மாநில அளவிலான வில் வித்தை போட்டியில் ஜீவிதா நான்கு பிரிவுகளில் பங்கேற்று தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை யும் வென்றார் .
இதன் மூலம் நவம்பர் மாதம் குஜராத்தில் நடைபெற உள்ள இந்திய தேசிய பள்ளிகளின் கூட்டமைப்பு நடத்தும் தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளார். இவரை தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர்ச.முரசொலி பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
தேசிய வில் வித்தை பயிற்சி யாளர் விஜய் உடன் இருக்கிறார்