தஞ்சாவூர், மார்ச் 13
தஞ்சாவூர்
மீனாட்சி மருத்துவமனை காவிரி டெல்டா பிராந்தியத்தில், உலகின் மிகச்சிறிய இதய பம்ப் உதவியோடு இம்மருத்துவச் செயல்முறையை வெற்றிகரமாக நிகழ்த்தியது. சிகிச்சை செயல்முறை நெடுகிலும் நோயாளிக்கு தற்காலிக இரத்தச் சுழற்சி ஆதரவை இம்பெல்லா கருவி வழங்கிய போது, கடுமையான இதய செயலிழப்பால் அவதிப்பட்ட ஒரு நோயாளிக்கு கால்சியம் படிமங்களை அகற்றி மூன்று ஸ்டென்ட்களை பொருத்தும் பணியை மருத்துவ நிபுணர்கள் வெற்றிகரமாக செய்திருக்கின்றனர்.
இது தொடர்பாக
இதயவியல் துறையின் தலைவரும் மற்றும் முதுநிலை சிறப்பு நிபுணருமான டாக்டர். B. கேசவமூர்த்தி
தெரிவிக்கையில்
இம்பெல்லா என்பது ஒரு பொறியியல் சார்ந்த இதய பம்பாகும் இதயத்திலிருந்து இரத்தத்தை பம்ப் செய்து உடலின் பிற உறுப்புகளுக்கு அனுப்புவதற்கு தற்காலிகமாக உதவும் பம்பாக செயல்படுகிறது. மேலும் மருத்துவ செயல்முறை மேற்கொள்ளப்படும் நேரத்திலும் மற்றும் அதற்கு பிறகு உடனடியாகவும் இதயத்திலிருந்து இரத்தத்தை இக்கருவி பம்ப் செய்வதன் மூலம் சிக்கலான ஆஞ்சியோபிளாஸ்டி செயல்முறையின் போது பாதுகாப்பை மேம்படுத்துகிறது. இதன் மூலம் இதயம் ஓய்வெடுக்கவும், இயல்பு நிலைக்குத் திரும்பவும் உதவுகிறது.
மிக முக்கியமான குருதியியக்க ஸ்திரத்தன்மையை இந்த இயங்குமுறை வழங்குகிறது. நிலையாக இரத்தம் இதயத்திற்கு செல்வதும் மற்றும் அனைத்து உறுப்புகளின் இயல்பான இயக்கங்களுக்கு ஆதரவாக இதயமும், இரத்தநாளங்களும் பராமரிக்கப்படும் நிலையையே இது குறிக்கிறது.
இந்த சிகிச்சை செயல்முறைக்கு பிறகு இம்பெல்லா நோயாளியிடமிருந்து அகற்றப்பட்டது. அதன்பிறகு முழுமையாக மீண்டு குணமடைந்திருக்கும் இந்நோயாளி இப்போது அவர் இயல்பான வாழ்க்கையை மீண்டும் சுறுசுறுப்பாக தொடங்க முழுமையான தகுதியோடு இருக்கிறார். வெறும் 3 மில்லிமீட்டர் ஆர அளவையேக் கொண்டிருக்கும் இந்த இதய பம்ப்பை பொருத்துவதும் மற்றும் அகற்றுவதும் இடுப்புக் கவட்டை தமனி வழியாக மேற்கொள்ளப்பட்டது. என்று கூறினார்.