தஞ்சாவூர் மே 29.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாநில அளவில் முதலிடத்தில் உள்ளது என மருத்துவ கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக அவசர சிகிச்சை தினம் மற்றும் தமிழக அரசின் நம்மை காக்கும் 48 இன்னு யிர் காப்போம் திட்டத்தின் வெற்றி க்கு பாராட்டு விழா நடந்தது இதற்கு மருத்துவக் கல்லூரி மருத்துவம னை முதல்வரும், மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரு மான பாலாஜி நாதன் தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது.
தமிழக முதலமைச்சரால் கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நம்மை காக்கும் 48 இன்னுயிர் காப்போம் திட்டம் தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல் பட்டு வருகிறது .இதற்காக அவசர சிகிச்சை துறையை பாராட்டுகிறே ன், இத்திட்டத்தின் கீழ் சாலை விபத்துகளில் காயம் அடையும் நபர்களுக்கு 48 மணி நேரத்திற்குள் அவசர மற்றும் தீவிர சிகிச்சைக்கு காப்பீட்டின் மூலம் ரூபாய் 1 லட்சம் வரை இலவசமாக செய்யப்படுகிற து , இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தங்களின் அரசு அனுமதிக்கப்பட்ட அடையாள அட்டையை சமர்ப்பித் தால் போதுமானது.
நம்மை காக்கும் 48 இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் வரும் சிகிச்சை, அறுவை சிகிச்சை, ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் எவ்விதமான கட்டணமும் இல்லாமல் காப்பீட்டின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இதுவரை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 6,169 பேர் பதிவு செய்யப்பட்டு, இதுவரை 5,690 பயனாளிகளுக்கு ரூபாய் 5 கோடியே 10 லட்சத்து 48, ஆயிரத்து 120 காப்பீடுத் தொகை பெறப்பட்டு ள்ளன.
இவ்வளவு பெரிய இமாலய தொகையை அரசு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பெற்றுத் தந்த அவசர சிகிச்சை துறை டாக்டர்கள், மேற்படிப்பு மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள், செவிலியர்கள், பணியா ளர்கள் மற்றும் காப்பீட்டு திட்ட ஊழியர்கள் அனைவரையும் மனமார பாராட்டுகிறேன். மாநில அளவில் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதலிடம் பிடித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்
இந்த நிகழ்ச்சியில் மாநில டி ஏ இ ஐ மேலாண்மை செயலாளர் மருதுதுரை, மருத்துவ கண்காணி ப்பாளர் ராமசாமி, உள்ளுறை மருத்துவ அதிகாரி செல்வம், துணை உள்ளுறை மருத்துவ அதிகாரி முகமது இதிரீஸ்,அவசர சிகிச்சை துறை தலைவர் (பொறுப்பு ) வினோத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
முதல் உதவி சிகிச்சை குறித்து மனித பொம்மைகள் மூலம் செய்மு றை பயிற்சி அளிக்கப்பட்டது ஒருவர் மரடைப்பால் மயங்கி விழுந்து விட்டால் அவரது மார்பு பகுதியில் இரு கைகளை வைத்து முதலில் அழுத்த வேண்டும் பின்னர் வாயோடு வாய் வைத்து மூச்சு கொடுக்க வேண்டும் என டாக்டர் செயல் விளக்கம் அளித்தா ர்.
ஆம்புலன்ஸ் வரும் வரை அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும், இப்படி முதல் உதவி செய்வதன் மூலம் மாரடைப்பு ஏற்பட்ட வரை காப்பாற்றி விடலாம் எனவும் முதலுதவி சிகிச்சை அளித்தாலும், அந்த நபரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதில் ஆட்டோ டிரைவர்கள், அவசர சிகிச்சையில் பணிபுரியும், ஊழியர்கள் 108 ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபடும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்