தஞ்சாவூர். நவ.25.
தஞ்சாவூர் ஒன்றியம் பிள்ளையார்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் யா.பிரியங்கா பங்கஜம் கலந்து கொண்டார்.
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர் மு.பாலகணேஷ், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் உதயகுமார் வரவேற்றுப் பேசினார்
மாவட்ட ஆட்சித் தலைவர்
பேசியதாவது: ,
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க சுதந்திர தினத் தை முன்னிட்டு கிராம ஊராட்சி களில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் நிர்ணயம் செய்தல் தொடர்பாக தஞ்சாவூர் 589 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பிள்ளையார்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், நடை பெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவினங்கள் குறித் தும்,அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஊட்டச்சத்து இயக்கம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம், வேளாண்மை உழவர் நலத்துறை, நமக்கு நாமே திட்டம், மகளிர் திட்டம் மற்றும் முதியோர் உதவி எண், விவசாயிகள் கடன் அட்டை கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்தும் இந்த கிராமசபை கூட்டத்தில் விவாதித்து பொது மக்களுடைய பல்வேறு கோரிக்கை களை கேட்டறிந்து விரைந்து முடித்திட அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
கல்வியில் இடைநிற்றலை தவிர்த்து குழந்தைகளை உயர் கல்வி பெறும் வகையில் நன்கு படிக்க வைக்க வேண்டும். மகளிர் சுய உதவி குழுக்களில் பெண்கள் அனைவரும் சேர வேண்டும். தொழில் கடன் உதவியாக வங்கிக் கடனுதவி பெற மகளிர் சுய உதவிக் குழுவில் அங்கம் வகிப்பதால் முன்னுரிமை பெறலாம் என பேசினார்.
.பிள்ளையார்பட்டி ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களையும், சிறந்த மகளிர் குழுக்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டி, பரிசுக ளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மை
இணை இயக்குநர் கோ.வித்யா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்,
இராஜேஸ்வரி மற்றும் அனைத்து த் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.