தஞ்சாவூர் ஜூலை 23.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா,முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை ,பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 410 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் வழங்கினார்கள்.இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்கள்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூபாய் 4250 மதிப்பில் காதொலிக் கருவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி ) உத்கர்ஷ் குமார்,ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் முனைவர் பாலகணேஷ் ,அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை நிர்வாக மற்றும் இயக்குனர் ரவிச்சந்திரன், தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பொறுப்பு உதவி ஆணையர் (கலால்) ரவிச்சந்திரன் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.