தஞ்சாவூர் ஆகஸ்ட் 20.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில்இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 432 மனுக்கள் பொதுமக்கள் ஆட்சித் தலைவரிடம் வழங்கினார்கள்.
இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக் கைகள் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பார்வையற்ற கல்லூரியில் பயிலும் மாணவிக்கு வாசிப்பு திறன் மேம்படுத்தும் டெய்சி பிளேயர் கருவியினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், உதவி ஆட்சித்தலைவர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.