தஞ்சாவூர் செப்.26
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட திட்டக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் முன்னிலையில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் திட்ட பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் கலந்தாய்வு மேற்கொண்டார் .மேலும் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் ,வட்டார ஊராட்சி வளர்ச்சி திட்டம் ஆகிய வற்றை தொகுத்து மாவட்ட ஊராட் சி வளர்ச்சி திட்டம் தயாரித்தல், பணி மேற்கொள்ளுதல், இயற்கை வளம் மற்றும் மனித வளம் சம்பந்தமான அனைத்து விவரங்களையும் சேகரித்து தொகுத்து தகவல் தளம் அமைத்தல், பொருளாதார வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை அமுல் படுத்த வரைவு திட்டங்கள் தயாரித்தல் போன்ற பல்வேறு பணிகள் குறித்து விவாதிக்கப் பட்டது மேலும் புதிதாக பெறப்பட்ட கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காணும் படி சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர்.உஷா புண்ணிய மூர்த்தி அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன் மாவட்ட திட்டமிடல் அலுவலர் பாரதிதாசன் மற்றும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்