தஞ்சாவூர். பிப் . 9.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பூதலூரில் ரூபாய் 192 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சார்பதிவாளர் அலுவலகக் கட்டடமும், தஞ்சாவூர் பாபநாசம் வட்டம் அம்மாபேட்டை பேரூராட்சி யில் புதியதாக சார்பதிவகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கஜம்
தலைமையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர்.கோவி. செழியன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
மாநிலங்களவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திர
சேகரன், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி தஞ்சாவூர் பதிவுத் துறை தலைவர் டாக்டர்.வி.ஏ.ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியத்தில் ஏற்கனவே பத்திர பதிவுத்துறை அலுவலகம் செயல்பட்டு வந்தது. காலப்போக்கி ல் இந்த பத்திரப்பதிவு அலுவலக
மானது பாபநாசம் நீடாமங்கலம் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்கு மாற்றப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்தில் சென்று வந்தனர். எனவே, பத்திரபதிவு அலுவலகத்தை மீண்டும் அம்மாபேட்டைக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, அம்மாபேட்டையில் மீண்டும் பத்திர பதிவு அலுவலகத்தை செயல்படுத்த உத்தரவிட்டார். பத்திர பதிவுத் துறை சார்பாக புதிய பத்திரப்பதிவு அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. அதேபோல் பூதலூர் வட்டத்தில் ரூ.192 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் உதவி பதிவுத் துறை தலைவர் வே.சின்னராஜ் பொதுப்பணித் துறை கட்டடம் செயற்பொறியாளர் நாகவேல் அம்மாபேட்டை பேரூராட்சி செயல் அலுவலர்நெடுஞ்செழியன்,பூதலூர் பதிவாளர் குமார் அம்மாபேட்டை பதிவாளர் விஜயன் அம்மாபேட்டை பேருராட்சி தலைவர் தியாக. சுரேஷ், பூதலூர் பேருராட்சி கல்லணை செல்லக்கண்ணு மற்றும் பலர் கலந்து கொண்டனர்