தஞ்சாவூர் ஜூலை 20,
தஞ்சாவூர் மாவட்டத்தில் அரண் மனை வளாகத்தில் 7வது புத்தகத் திருவிழா தஞ்சாவூர் எம்.பி. முரசொலி தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந் து நடத்தும் மாபெரும் புத்தகத் திருவிழாவினை மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமை .யில் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி கே ஜி நீலமேகம், மாநகராட்சி மேயர்கள் சண். ராமநாதன் ( தஞ்சாவூர்) சரவணன் (கும்பகோணம் )துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
பின்னர் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி தெரிவித்த தாவது:
மாண்புமிகு தமிழக முதலமைச் சர் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்கம் இணைந்து நடத்து ம் 7வது ஆண்டு தஞ்சாவூர் புத்தகத் திருவிழா இன்று தொடங்கி 29. 7.24 வரை 11 நாட்கள் அரண் மனை வளாகத்தில் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடை பெறுகிறது.
இந்த புத்தகத் திருவிழாவில் 110 அரங்கங்கள் பத்தாயிரம் தலைப்பு களுக்கு மேல் நூல்கள் இடம் பெற்றுள்ளன. 40 அறிவியல் அரங்கங்கள் 25 உணவு மற்றும் பல்துறை சார்ந்த அரங்கங்களும் என மொத்தம் 175 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது
நாள்தோறும் காலை 10:30 மணிக்கு அறிவியல்அரங்கமும், தொடர்ந்து 11:30 மணிக்கு தஞ்சா வூர் மாவட்டத்தை சேர்ந்த படைப் பாளிகள் பங்கேற்கும் இலக்கிய அரங்கம் நடைபெறும். மேலும் மாலை 6 மணிக்கு சிறப்பான கிராமிய கலை நிகழ்ச்சிகளும், நடைபெறுகிறது. நாள்தோறும் 6:30 மணிக்கு தமிழகத்தில் தலைசிறந்த சொற்பொழிவாளர்கள் பங்கேற்கும் நகைச்சுவை சிந்தனைகள் நடை பெறுகிறது
மேலும் அறிவியல் வாகனம், தொழில்நுட்ப வாகனம், புத்தக வாகனம் போன்றவை வளாகத்தில் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தக கண்காட்சிகள் பள்ளி கல்லூ ரி மாணவர்களை ஊக்குவிப்பதற் காக நடமாடும் வாகனத்தில் அமை க்கப்பட்டுள்ளது
பள்ளி கல்லூரி மாணவர்களை ஊக்குவிப்பதற்காக நாள்தோறும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. பங்கேற்பாளர்களுக்கு பரிசு கூப் பன் வழங்கப்பட்டு, குலுக்கல் முறையில் நாள்தோறும் மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும். புத்தகத் திருவிழாவிற்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவாக செய்யப்பட்டுள் ளது .விழாவில் மாணவர்கள், பொதுமக்கள், புத்தக ஆர்வலர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்றார்.
விழாவில் மாநகராட்சி ஆணைய ர் மகேஸ்வரி, கோட்டாட்சியர் இலக்கியா, மாவட்ட நூலக அலுவல ர் முத்து ,தஞ்சாவூர் ஒன்றிய குழு துணைத்தலைவர் அருளானந்தசா மி ,பபாசி செயலாளர் முருகன், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழு உறுப்பினர் பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.