நாகர்கோவில் அக் 24
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகா சரவணந்தேரி கிராமத்தில் அமைந்துள்ள 50 ஆண்டு கால பழமை வாய்ந்த அருள்மிகு கோகுல விநாயகர் திருக்கோவிலில் உள்ள விநாயகர் சிலை திருட்டு போய் உள்ளது. திருட்டு சம்பவம் நடந்துள்ள திருக்கோவிலுக்கு தளவாய்சுந்தரம் எம் எல் ஏ நேரில் சென்று பார்வையிட்டு திருடியவர்களை கண்டுபிடித்து, திருட்டு போன சிலைகளை மீட்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
இதுகுறித்த விவரம் வருமாறு:-
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அகஸ்தீஸ்வரம் தாலுகா, சரவணந்தேரி கிராமத்தில் 50 ஆண்டு கால பழமை வாய்ந்த அருள்மிகு கோகுல விநாயகர் திருக்கோவில் ஊர் குளத்தன்கரை அருகில் உள்ளது. இத்திருக்கோவிலுக்கு சுற்று வட்டார மக்கள் மற்றும் அவ்வூர் பொதுமக்கள் வந்து இறை வழிபாடு செய்து வந்தனர். இத்திருக்கோவிலில் 22-10-2024 செவ்வாய்கிழமை இரவு வரை ஆலயத்தில் மூலவர் விக்ரமும், முஷிக வாகன விக்ரமும் இருந்தது. 23-ம் தேதி புதன்கிழமை அதிகாலை 6 மணி அளவில் பார்க்கும் போது இத்திருக்கோவிலில் இருந்த விநாயகர் மூலவர் விக்ரமும், முஷிக வாகன விக்ரமும் காணாமல் போய் இருந்தது. கோவில் பூட்டை உடைத்து திருடர்கள் இச்சம்பவத்தை அரங்கேற்றி உள்ளார்கள்.
தகவல் அறிந்த தளவாய்சுந்தரம் எம் எல் ஏ சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்தார். இதுகுறித்து அவர் காவல்துறை அலுவலர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். திருடியவர்களை கண்டுபிடித்து, திருட்டு போன சிலைகளை மீட்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். இது குறித்து சரவணந்தேரி அருள்மிகு கோகுல விநாயகர் திருக்கோவில் சார்பில் தென்தாமரைகுளம் காவல்துறை உதவி ஆய்வாளரிடம் புகார் மனுவும் கொடுக்கப்பட்டுள்ளது. உடன்
அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் தாமரை தினேஷ், அகஸ்தீஸ்வரம் பேரூர் கழகச் செயலாளர் சிவபாலன், ஒன்றிய கழக பொருளாளர் தங்கவேல், கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் உடனிருந்தனர்.