நாகர்கோவில் அக் 31
அதிமுக. 53 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் காணுகின்ற தீபாவளி திருநாளை
இரட்டிப்பு மகிழ்ச்யுடன் நாம் அனைவரும் கொண்டாடுவோம். தளவாய் சுந்தரம் எம்எல்ஏ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது :-
நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தீபாவளித் திருநாள் முகத்தில் மலர்ச்சி, மனதில் மகிழ்ச்சி, காண்பதில் குளிர்ச்சி இவை அனைத்தும் கிடைப்பதே தித்திக்கும் தீபாவளி தரும் பரிசாகும். தர்மத்தை காக்க இறைவன் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா நரசிம்ம அவதாரம் எடுத்து அநீதி அழிய, அக்கிரமங்கள் ஒழிய, நரகாசுரனை வீழ்த்தி அழித்து தர்மத்தை நிலைநாட்டிய நாளே தீப ஒளி கண்ட நன்நாள் அதுவே தீபாவளித் திருநாள். மகிழ்ச்சி பொங்கும் பொன்நாள், சுற்றம் சூழ மகிழும் நாள், உலகமெங்கும் கவலைகள் மறந்து ஆனந்தம் காணும் நாள் புத்தாடை அணிந்து, தர்மங்கள் செய்து மகிழ்வுடன் உணவுண்டு உறவுகள் நட்புகளுடன் கலந்துரையாடி உள்ளம் மகிழும் மகத்தான நாள். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என இந்நாளில் இறைவன் திருவடி வணங்கி ஒற்றுமையை சீர்குலைக்கும் சக்திகளை வேரறுப்போம். உலகில் அனைத்திலும் நமது இந்திய தேசம் முதலிடம் பெறுவதற்கு உழைப்போம்! உயர்வோம்!! அனைத்து வளங்களும் அனைவரும் பெற்று வாழ்ந்திட இறைவன் அருள் புரியட்டும்!!! அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 53-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் காணுகின்ற இத்தீபாவளி திருநாளை இரட்டிப்பு மகிழ்ச்சியோடு நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம். அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.