ஆரல்வாய்மொழி மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் தைப்பூச திருவிழா
பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது
ஆரல்வாய்மொழியில், பிப் 06:ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெற்றது இதனை முன்னிட்டு பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது
ஆரல்வாய்மொழி வடகூர் அருள்மிகு பரகோடி கண்ட சாஸ்தா அருள்மிகு மீனாட்சியை சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது .இதனை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமத்துடன் பூஜை தொடங்கப்பட்டது..பின்னர் அருள்மிகு பரகோடி கண்ட சாஸ்தா அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் பின்புறம் அமைந்துள்ள தெப்பக்குளம் அருகே அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர் திருக்கோவிலிலிருந்து முருகர் சன்னதிக்கு தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு 160 பால்குடம் மற்றும் அபிஷேக குடம் ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலத்தினை ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் தொடங்கி வைத்தார்.இந்த ஊர்வலமானது நான்கு ரத வீதிகளையும் சுற்றி வந்து அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள அருள்மிகு முருகர் சன்னதியை வந்தடைந்தது.பின்னர் சிறப்பு அபிஷேகமும் அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது சிறப்பு பூஜையினை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மேல்சாந்தி பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார் நடத்தினார்.
இந்நிகழ்வில் முத்துசாமி, தாணுபிள்ளை, வள்ளிநாயகம்,கழக வீரபாகு மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.