நாகர்கோவில் – ஜூன் – 04,
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியம் மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட தடிக்காரன்கோணம் – கீரிப்பாறை சாலையானது பல வருடங்களாக செப்பனிடப்படாமல் மிக மோசமாக பழுந்தடைந்த நிலையில் உள்ளது. சாலையில் காணப்படும் மிகப்பெரிய அளவிலான குண்டு குழிகள் வாகன போக்குவரத்திற்கு மிகப்பெரும் இடையூறாகவும், அச்சுறுத்தலாகவும் உள்ளது.
மேற்படி சாலையை செப்பனிட வலியுறுத்தி ஏற்கனவே பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்கள் தரப்பட்டுள்ளன. மேலும் சிபிஐ(எம்) கட்சியின் சார்பில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்ட தொடர் போராட்டங்களும் நடைபெற்றுள்ளன.
போராட்ட களங்களில் கலந்து கொண்ட அதிகாரிகள், இச்சாலை தொடர்பாக ஒப்பந்தக்காரர்கள் தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் சாலையை செப்பனிடுவதில் சிரமம் உள்ளது. வழக்கு தீர்ந்த உடன் சாலையை செப்பனிட நிரந்தரமான நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி தந்தனர்.
தற்போது பெய்து வரும் மழையால் மேற்படி சாலை மேலும் மேலும் பழுதடைந்து பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத அளவில் சேதமடைந்தும், வாகனங்களும் குண்டு குழிகளில் விழுந்து விபத்துக்களை ஏற்படுத்தியும் வருகிறது.
அண்மையில் சாலை தொடர்பான நீதிமன்ற வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே மேலும் காலதாமதம் செய்யாமல் மரணக் குழிகளாக காட்சியளிக்கும் தடிக்காரன்கோணம் கீரிப்பாறை சாலையை போர்க்கால அடிப்படையில் செப்பனிட்டுத்தர உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தோவாளை வட்டாரக் குழு செயலாளர் மிக்கேல் தலைமையில்,கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என் எஸ் கண்ணன் ரெஜிஸ் குமார் ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர் பலர் கலந்து கொண்டனர்