தஞ்சாவூர்.ஜூன் 23
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
ஒரத்தநாடு பேரூராட்சியில் உங்கைளை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு மேற்கொண்டார் அதன்படி ஒரத்தநாடு பேரூராட்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார் அப்போது ஒரத்தநாடு பஸ் நிலைய த்தில் உள்ள கட்டணக் கழிவறை மற்றும் பொது கழிவறை மிகவும் அசுத்தமாகவும், கட்டண விகிதங்க ள் குறிப்பிடப்படாமல் இருந்ததை கண்டறிந்தார். மேலும் ஆர்.வி நகர் பூங்காவில் புதர்கள் மண்டி அசுத்த மாகவும், விளையாட்டு உபகரண ங்கள் பயன்படுத்த முடியாத அளவு க்கு துருப்பிடித்தும் சேதம் அடைந்த நிலையிலும் காணப்பட்டது.
இதையடுத்து கழிவறைகளை யில் சரி செய்தும், பழுதுபட்டுள்ள உபகரணங்களை உடனடியாக சீர் செய்து, பொதுமக்கள் பயன்பாட்டு கொண்டுவர கலெக்டர் தீபக் ஜேக்க ப் அறிவுறுத்தினார். கலெக்டரின் அறிவுரையை செயல்படுத்தாத ஒரத்தநாடு சுகாதார ஆய்வாளர் செந்தில்குமாரகுரு என்பவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.