அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பங்கேற்கும் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ அழைப்பு
தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தென்காசி வடக்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் மாவட்ட அவை தலைவர் பத்மநாபன் தலைமையிலும், அதனை தொடர்ந்து முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது எனவும், இதில் தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சரும் , வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார் எனவும் , இக்கூட்டத்தில் மாநில,மாவட்ட,கழக நிர்வாகிகள்,தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள்,ஒன்றிய, நகர,பேரூர் கழக செயலாளர்கள், மற்றும் சார்பு அணி தலைவர்கள், துணை தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள்,
தவறாது கலந்து கொள்ளும்படி அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.