சுசீந்திரம், டிச. 26-
குமரி மாவட்ட திருக்கோவில் பணியாளர்களுக்கு தமிழக அரசின் 1998 ஆணைப்படி சம்பளம் வழங்காமல் பழி வாங்கி வரும் கன்னியாகுமரி கோவில் நிர்வாகத்தின் போக்கினை கண்டித்து குமரி மாவட்ட ஆலய ஊழியர் சங்க சிஐடியு சார்பில் ஆலய ஊழியர்கள் குடும்பத்துடன் சுசீந்திரத்தில் உள்ள இந்து அறநிலைத்துறை அலுவலகம் முன்பு இன்று காலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் அஜிகுமார் கோரிக்கை விளக்கி பேசினார். சிஐடியு மாவட்ட செயலாளர் தங்க மோகனன், முன்னாள் எம்எல்ஏ லீமாரோஸ், ஆலய ஊழியர் சங்க உதவி தலைவர் வல்சகுமார். ஆகியோர் தர்ணா போராட்டம் குறித்து பேசினர். தர்ணா போராட்டத்தில் ஆலய ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஆலய ஊழியர்கள் கோரிக்கை தொடர்பாக இணை ஆணையர்(பொறுப்பு) ஜான்சி ராணியை சந்தித்தனர். அப்போது இணை ஆணையர் உங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி தாருங்கள் அதனை நடவடிக்கை எடுக்க ஆணையருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.