தருமபுரி மாவட்டம்,
பழைய தருமபுரி கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன், ஸ்ரீ பட்டாளம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளின் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழாவையொட்டி
மங்கள் இசையுடன் சுவாமிகளுக்கு பூசை. நடைபெற்றது. இதில் சாமிக்கு பால்குடம் ,முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து வந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது . இதில் வழிநடங்க வான வேடிக்கை ,
குதிரை ஆட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, மற்றும் சாமி சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடைபெற்றது. 300 – க்கும் மேற்பட்ட பெண்கள் பால் குடம் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
இதற்கான ஏற்பாட்டை சபரி,செல்வராஜ் ஊர் கவுண்டர்,கோவிந்தசாமி ஊர் உடையார்,சதாசிவம்ஊர் செட்டியார், பழனி நாட்டு கவுண்டர், முத்து கவுண்டர் மந்திரி கவுண்டர், பெரியசாமி ஊர் கௌவுர கவுண்டர், கோவிந்தராஜ் ஊர் கோல்காரர், ஊர் நிர்வாகிகள்,ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.