முதுகுளத்தூர் டிச.30
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றியதுக்குட்பட்ட அரப்போது சமுதயகூடத்தில் நடைபெற்ற தமிழ்நாடு பாஜக உட்கட்சி ஒன்றிய தலைவர் தேர்தலை இராமநாதபுரம் பாஜக மாவட்ட தலைவர் முறைகேடாக நடத்தியதாக நிர்வாகிகள் கூறி அடி தடி மற்றும் வாக்கு சீட்டுகள் கிலிப்பில் ஈடுபட்டனர். பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன் ஏற்கனவே முதுகுளத்தூர் ஒன்றிய தலைவராக இருந்த மோகன்தாஸ் என்பவரை மீண்டும் முதுகுளத்தூர் ஒன்றிய தலைவராக நியமனம் செய்ய முடிவு செய்து மோகன்தாஸ் என்பவருக்கு கிளைத் தலைவர்கள் அனைவரும் வாக்கு செலுத்த வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது. அதன் அடிபடையில் கட்சி நிர்வாகிகள் மாநில தலைமை அறிவுறுத்தலின் படி முறையாக தேர்தலை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர், அதனை ஏற்காமல் மாவட்டத்தலைவர் முறைகேடாக தேர்தல் நடத்த பட்டாதல் கட்சியினர் இடையே அடி தடியாகி வாக்கு சீட்டுகள் கிழிக்க பட்டடு மாவட்ட தலைவரை கண்டித்தனர் இதனால் கட்சியினர் இடையே பரபரப்பு ஏற்பட்டது.