ஈரோடு செப் 26
2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கம் சார்பில் ஈரோடு காளை மாடு சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான பேர் கலந்துகொண்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .
மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில
தலைவர் வடிவேல் சுந்தர் வரவேற்றார். மாநில துணை அமைப்பாளர் தினேஷ் பாபு முன்னிலை வகித்தார் இதில் மாநில செயலாளர் சண்முக பிரியா ,பொருளாளர் ஹரிஹரசுதன் அமைப்பாளர் ஸ்ரீதரன் பொறுப்பாளர் ஏகாம்பரம், ஊடக பிரிவு செயலாளர் சிவக்குமார் மகளிர் அணி செயலாளர் சுகுணா தேவி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் இந்த ஆர்ப்பாட்டம் குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் கூறியதாவது 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் 11 ஆண்டுகளாக பணியின்றி அடிப்படை வாழ்வதாரம் இழந்து தவிக்கும் 40 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பலர் அல்லல்பட்டு வருகிறோம் எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இதுவரை தமிழகம் முழுவதும் 70 க்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தி உள்ளோம் ஆனால் இதுவரை தீர்வு காணப்படவில்லை ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் மீண்டும் இன்னொரு நியமன
தேர்வு என்ற நடைமுறை இந்தியாவில் மட்டுமே பின்பற்றப்படுகிறது ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி தேர்ச்சி பெற்றவர்களை பாதிக்கும் அரசாணை எண் 149 போட்டி தேர்வை
முற்றிலும் அகற்ற வேண்டும் தி மு க தேர்தல் அறிக்கை 177 ஐ உடனடியாக நிறைவேற்ற வேண்டும் முறைசாரா பணியாளர்களாக முற்றிலும் வாழ்வாதாரம் இழந்து
தவிக்கும்
பாதிக்கப்பட்ட 4000 ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் தொகுப்பு ஊதியத்திலாவது பணியமர்த்திட வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார் .
இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது காதுகளில் பூ வைத்து நூதன முறையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.