இந்த விழாவில் குடசம் தமிழ் இலக்கியம் மன்றம் சார்ந்த நிகழ்ச்சி
கல்லூரியின் தாளாளர் மற்றும் செயலாளர் முனைவர் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர்
ஜெ, ஆனந்தராஜ் முன்னிலை வகித்தார்.
மதுரை காமராஜ் பல்கலைக்கழக பெண்ணியல் துறை இயக்குனர் திருமதி ராதிகா தேவி அவர்கள் மற்றும்
திருமங்கலம் அரசு கலைக் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் முனைவர் கரு முருகேசன், நாராயண சேதுபதி மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்
ரா, முனியம்மாள், மாநகராட்சி நாவலர் சுந்தரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளி (பழங்காநத்தம்) தலைமை ஆசிரியர், முஷ்ட குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியின் முத்துராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அனைத்து விருந்தினர்களும் தங்கள் உரைகளில் மாணவர்களின் புத்தாக்கத் திறனை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி விழாவை மேலும் சிறப்பித்தனர். போட்டிகளில் மல்லிகை குழு சுழற் கோப்பையை வென்றது. கோப்பையை வெற்றி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த விழா கல்லூரியின் முதல்வர் முனைவர் வி,வசந்தகுமார் மேற்பார்வையில் தமிழ் துறை ஆசிரியர்கள் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை
சிறப்பாக செய்திருந்தனர்.