செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி அடுத்த மேலவலம் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது
இந்நிகழ்ச்சியில் அரிமா சங்கத்தின் மாவட்ட தலைவர் வரதராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
பள்ளி மாணவ மாணவிகளிடம் ஆசிரியர்களின் பங்களிப்பு பற்றி கருத்துக்களை பரிமாறினார் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் அரிமா சங்கத்தின் தலைவர் அசோக் மற்றும் கருங்குழி பேரூராட்சி வார்டு உறுப்பினரும் அரிமா சங்கத்தின் செயலாளருமான தினேஷ் மற்றும் பொருளாளர் தமிழ்மாறன் மற்றும் அரிமா சங்கத்தின் மாவட்ட தலைவர் வரதராஜன், பார்த்திபன், பாபு, விஜய் மற்றும் அரிமா சங்கத்தின் வட்டாரத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பள்ளியின் ஆசிரியர்களுக்கு நூலாடை அணிவித்து நினைவு பரிசு மற்றும் இனிப்பு வழங்கி விருந்து அளித்து ஆசிரியர்களை கௌரவித்தனர் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் மாணவ மாணவிகள் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்