ஆசிரியர் தின விழா
ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலையில், தமிழ் மன்றம் சார்பில், ஆசிரியர்கள் தின விழா வேந்தர் முனைவர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.துணைத்தலைவர் முனைவர் எஸ்.சசிஆனந்த்,
துணைவேந்தர் முனைவர் எஸ்.நாராயணன்,பதிவாளர் முனைவர் வி.வாசுதேவன் உரையாற்றினர்
துணை வேந்தர் தம் ஆசிரியராய் பணி புரிந்து துணைவேந்தராய் வளர்ந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
“ஆசிரியர்களுடைய கூட்டு முயற்சிதான் மாணவர்களையும்,பணியாற்றும் கல்வி நிறுவனத்தையும்,தங்களையும் உயர்நிலைக்கு கொண்டு செல்லும்” என்றார்.
மாணவர் நல இயக்குநர் சாம்சன் நேசராஜ் வரவேற்றார்.
இயக்குநர்கள்,டீன்கள்,துறை தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.
தமிழ் மன்ற தலைவி சங்கீதா ,ஆசிரியர்களுக்கிடையே கட்டுரைப்போட்டி நடத்தினார். போட்டியில் வெற்றி பெற்ற,கலந்து கொண்டவர்களுக்கு கேடயம், சான்றிதழ்களை துணை வேந்தர் வழங்கினார்.
ஐஎஸ்டிஇ மாணவர்கள் அனைத்து பேராசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள் கூறி எழுது கோல் பரிசு வழங்கி மகிழ்ந்தனர்.
ஏஐசிஐ இயக்குநர் சேஷாத்திரி இனிய வாழ்த்து தெரிவித்தார்.
இயந்திரவியல் துறை மாணவர்கள் பேராசிர்களுடன் விழா நடத்தினர்.
பேராசிரியர் சங்கீதா நன்றி கூறினார்.